தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு விக்கிரவாண்டியில் ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கண்காணிப்பதற்கு விஜய் ஒருங்கிணைப்பு குழுவை புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நியமித்துள்ளார். நடிகர் விஜய் தன்னுடைய கொள்கைகளை முதல் மாநாட்டில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சமீபத்தில் பெரியார் திடலுக்கு சென்ற நேரில் மரியாதை செலுத்தியதால் அவர் என்ன மாதிரியான கொள்கைகளை கடைபிடிக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்தது.

அதே சமயத்தில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய் மற்றும் பண்டிகைக்கெல்லாம் வாழ்த்து தெரிவித்ததோடு பெரியார் மற்றும் அண்ணா போன்றவற்றின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் தற்போது விக்கிரவாண்டியில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் போஸ்டர்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு போஸ்டரில் விதியை மாற்றுவோம் விக்கிரவாண்டியில் என்று எழுதப்பட்டுள்ளது‌. அதேபோன்று மற்றொரு போஸ்டரில் அண்ணா, பெரியார், எம்ஜிஆர் மற்றும் விஜயின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இவர்கள் வரிசையில் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் விஜய் என்பது போல் சுவரொட்டிகள் அடிக்கப்பட்டுள்ளது.