சாம்பியன்ஸ் டிராபி  தொடரின் இறுதி சுற்றுக்கு நியூசிலாந்து அணி ஆனது தகுதி பெற்றது. இதன் மூலமாக தென்னாபிரிக்கா மீண்டும் ஒரு அரை இறுதி போட்டியில் தோல்வி தழுவி இருக்கிறது. இதன் மூலம் ஐசிசி ஒருநாள் தொடரில் இதுவரை தென் ஆப்பிரிக்க அணி 11 முறை மோதி இருக்கிறது. இதில் 1998-ம் வருடம் இலங்கைக்கு எதிரானதாக மட்டுமே தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. ஒன்பது அரை இறுதியில் தோல்வியும், ஒரு அரை இறுதியில் டிராவும் ஆகி உள்ளது. இதனால் ஐசிசி ஒருநாள் அரை இறுதி போட்டிகளில் அதிக முறை தோல்வியை தழுவிய அணி என்ற பெருமையை தென் ஆப்பிரிக்க அணி பெற்றுள்ளது.

இந்த நிலையில் தென்னாபிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பெவுமா இந்த தோல்வி குறித்து கூறுகையில்,” 320 ரன்களை அடித்தது இந்த ஆடுகளத்தில் நல்ல ஸ்கோர்தான். இதுவே 350 ரன்கள் என்ற இலக்கு இருந்திருந்தால் கூட நாங்கள் இந்த ஸ்கோரை எட்ட முடியும் என்று நம்பி இருப்போம். எங்களை கடும் அழுத்தத்தில் நியூசிலாந்து பாவுலர்கள் வைத்திருந்தார்கள். ஒரு விக்கெட்டுக்கு 125 என்ற ஸ்கோரில் இருந்தும் அதன் பிறகு நாங்கள் அடுத்தடுத்து சில விக்கெட்டுகளை இழந்தோம். இதன் மூலமாக கடைசியில் வரும் வீரர்கள் பெரிய ஸ்கோரை துரத்த வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டார்கள்.

இனிவரும் காலத்தில் நாங்கள் இன்னும் ஆக்ரோஷமாகவும், அதிரடியாகவும் விளையாட வேண்டும். எதிரணி வீரர்களுக்கு வாய்ப்புகளை நாங்கள் கொடுத்துவிட்டோம். அவர்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்து விட்டோம். இனி அந்த தவறை செய்யக்கூடாது. ஆட்டத்தில் இருக்கும் முக்கிய தருணங்களை சரியாக பயன்படுத்தினாலே நம்மால் வெற்றி பெற முடியும்” என்று கூறியுள்ளார்.