தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரே இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராயன். சமீபத்தில் வெளியான இப்படம் பிரமாண்ட வரவேற்பு பெற்றது. மேலும் நல்ல வசூலை கொடுத்து வருகின்றது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தனுஷ் புதியதாக போயஸ் கார்டனில் கட்டி இருக்கும் பிரம்மாண்ட வீட்டின் முன்பு ரசிகர்கள் கூடினர். அவருக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  அப்போது வெளியே வந்த தனுஷ் ரசிகர்களை சந்தித்து கை கொடுத்து நன்றி கூறினார்.