தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மாதவன். இவர் கடந்த 2000 ம் ஆண்டு “அலைபாயுதே” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தியில் அமீர் காணுடன் இவர் நடித்த “3 இடியட்ஸ்” என்ற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளியான “தனு வெட்ஸ் மனு”, “தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்” ஆகிய 2 திரைப்படங்களில் நடித்து, அவை பிளாக்பஸ்டர் ஆனது. இந்நிலையில் இவர் நடிகர் தனுஷை பார்த்து பொறாமை படுவதாக கூறியுள்ளார்.

அதாவது ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் 2 படங்களில் நடத்திருக்கிறேன். எனக்கு தனுஷை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. அவரது அடுத்த படத்தை ஆனந்த் தான் இயக்க இருக்கிறார். ஆனந்துடன் வேலை பார்க்கும் எந்த நடிகரை பார்த்தாலும் நான் பொறாமைப்படுவேன் என்றார். நடிகர் தனுஷ் ஆனந்த் இயக்கத்தில் 2013ல் வெளியான “ராஞ்சனா” என்ற படத்தில் நடித்தார். அதோடு ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற படத்தையும் ஆனந்த் தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்காதாகும்.