தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரம் தனுஷ் ராயன் படத்தை இயக்கி அதில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோன்று குபேரா, இட்லி கடை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி பிசியாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதனை அடுத்து ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில்தனுஷ் நடிப்பில் D55 படத்திற்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் பூஜை போடப்பட்டது. ஆனால் இன்னும் படம் தொடங்கப்படாமலே உள்ளது. இந்த நிலையில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அந்த படம் குறித்து ஹிண்ட் கொடுத்துள்ளார்.