திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பட்டி கிராமத்தில் ஜானகிராமன்- வேண்டம்மாள் (42) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் வேண்டம்மாள் தைராய்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தைராய்டு பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்த நிலையில் அவர் கண் விழிக்காததால் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

அதன்படி அவர்களும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வேண்டம்மாள் பரிதாபமாக இறந்தார். இதனால் அவருடைய உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்த தகவலின் பேரில் ஆம்பூர் டவுன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து கலந்து சென்ற நிலையில் உறவினர்கள் வேண்டம்மாளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.