
சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் தனியார் பள்ளியில் எதிர்பாராத விதமாக அடித்த வாயு நெடி காரணமாக பள்ளியில் மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த வாயு நெடியின் காரணமாக சில மாணவ, மாணவிகள் மயக்கம் அடைந்துள்ளனர். இது குறித்த அறிந்த அறிவியல் வல்லுநர்கள், காவல்துறையினர் ஆகியோர் பள்ளிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாயு நெடி காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களை திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த அறிந்த பெற்றோர்கள் பள்ளியின் வளாகத்தில் முன்பு குவிந்துள்ளனர். இந்தச் வாயு நெடி காரணமாக 35 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூன்று மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்களை திருவொற்றியூர் அரசு மருத்துவமனைக்கு எம்.எல்.ஏ கே.பி. சங்கர், மண்டல குழு தலைவர் தனியரசு ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினார். பள்ளி வளாகத்தின் உள்ளே வாயு கசிவு ஏற்பட்டதா? அல்லது அருகில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது என துறை ஆணையர் சக்திவேல் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு குழு ரசாயன வாயு பாதுகாப்பு உபகரணங்களுடன் பள்ளி முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.