சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் தீபக்குமார் என்பவரும் இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தீபக் குமார் இளம்பெண்ணை பலமுறை பல்வேறு இடங்களை அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

கடந்த மூன்று மாதமாக தீபக் குமார் அந்த பெண்ணிடம் பேசாமல் இருந்தார். இது குறித்து கேட்டபோது உன்னை திருமணம் செய்ய முடியாது என தீபக் குமார் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தீபக் குமாரை கைது செய்தனர்.