
தோனி மீண்டும் இதயங்களை வென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..
தோனி தனது ரசிகர்களை சந்திக்க முன்வருவதையும் பார்த்திருக்கிறோம். தோனி தனது ரசிகர்களுடன் நேரடியாக உரையாடுவது அல்லது சந்திப்பது இது முதல் முறை அல்ல. முன்னதாக, ஒரு ரசிகர் தோனியின் காரை அவரது வீட்டில் இருந்து ஜார்கண்ட் விமான நிலையம் வரை துரத்தினார். இந்நிலையில் மீண்டும் தனது ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றினார் தோனி. இந்த முறை தோனியின் செயல் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் ரசிகர் ஒருவர் தனது பைக்கில் மகேந்திர சிங் தோனியின் ஆட்டோகிராப் கேட்பதை காணலாம். மகேந்திர சிங் தோனிக்கு பைக் மற்றும் கார் மீதுள்ள காதல் யாருக்கும் மறைக்கப்படவில்லை. அவரது முதல் மற்றும் மலிவான பைக்குகள் முதல் சூப்பர் பைக்குகள், சொகுசு பைக்குகள், சொகுசு க்ரூஸர் பைக்குகள் மற்றும் விண்டேஜ் மோட்டார் சைக்கிள்கள் வரை தோனிக்கு மிகப்பெரிய கலெக்ஷன் உள்ளது. அதனால் தோனி கூட அந்த ரசிகரிடம் நோ சொல்லவில்லை. தோனி ஆட்டோகிராப் கொடுத்ததோடு மட்டும் இல்லாமல் இந்த முறை தான் செய்த அதிரடியால் அனைவரின் மனதையும் வென்றார்.
ஆட்டோகிராப் கொடுக்கும் போது, தோனி தனது சொந்த டி-சர்ட் மூலம் ரசிகரின் பைக்கில் உள்ள தூசியை சுத்தம் செய்து, பின்னர் ஆட்டோகிராப் கொடுத்துவிட்டு பைக்கில் உட்கார்ந்து ஸ்டார்ட் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இதுதான் தோனியின் குணம் என்று ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ ஆயிரக்கணக்கான லைக்குகளையும் ஷேர்களையும் பெற்று வருகிறது. இதற்கு மக்களும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Mahi delights a Lucky Fan by Signing Autograph on his Bike !! 🖤😇#MSDhoni | #WhistlePodu | #Dhoni
📹 via Sumeet Kumar Bajaj pic.twitter.com/lvOL9hboud— TEAM MS DHONI #Dhoni (@imDhoni_fc) November 26, 2023
MS Dhoni signing an autograph on friend’s Super bike ❤️
– His love for Bikes 🤩#INDvAUS #INDvsAUS #TeamIndia #AUSvIND #toyshowpic.twitter.com/h8ndOdacaN
— Fourth Umpire (@UmpireFourth) November 25, 2023