மதுரை மாவட்டம் கேகே நகர் பகுதியில் ஸ்ரீ கிண்டர் கார்டன் என்ற மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆருத்ரா என்ற 4 வயது சிறுமி படித்து வந்த நிலையில் இன்று பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த போது திறந்தவெளி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி கிட்டத்தட்ட அரை மணி நேரமாக தண்ணீரில் தத்தளித்த நிலையில் பின்னர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது‌.

ஆனாலும் சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு தனியார் பள்ளியின் அஜாக்கிரதை தான் காரணம் என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் பள்ளி உரிமையாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.  இந்த நிலையில் மதுரை மாவட்ட கல்வி அதிகாரி மழலையர் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.