மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் கூலி தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 10 வயது மற்றும் 8 வயதில் இரு மகள்கள் இருந்துள்ளனர். இந்த சிறுமிகள் இருவரும் கடந்த புதன்கிழமை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் ‌போயுள்ளனர். அதாவது அஜய் தாஸ் அவர் சிறுமிகளை கடத்தி சென்றுள்ளார். இவருக்கு 54 வயது ஆகும் நிலையில் அந்த வீட்டின் முதல் மாடியில் வசித்து வருகிறார்.

இதற்கிடையில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை காணாமல் தேடிய நிலையில் பின்னர் மாலை நேரத்தில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் அதே தாஸ் வீட்டில் மாடியில் உள்ள தண்ணீர் டேங்கில் சிறுமிகள் தலைகீழாக செத்து மிதந்தது தெரியவந்தது. அதாவது அவர் இரு சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்று தண்ணீர் தொட்டிக்குள் தலைகீழாக வீசியுள்ளார்.

இவர் மாநிலத்தை விட்டு தப்பி ஓட முயன்ற நிலையில் நேற்று அவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமிகள் இருவருக்கும் லட்டு கொடுப்பதாக கூறி தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் மூத்த சிறுமியை அவர் கழிவறைக்குள் தள்ளிய நிலையில் இரண்டாம் சிறுமி கத்தி கூச்சலிடமே அந்த சிறுமியை பலாத்காரம் செய்து பின்னர் தண்ணீர் தொட்டிக்குள் அமுக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர் கழிவறைக்குள் வைத்து மூத்த சிறுமியை அவர் பலாத்காரம் செய்துள்ள நிலையில் அந்த சிறுமி கத்தி கூச்சலிட்டதால் பின்னர் அவரையும் தண்ணீர் தொட்டிக்குள் அமுக்கி கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சிறுமியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு காவல் நிலையத்தின் முன்பாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.