
சென்னையில் இருந்து விருதாச்சலம் வழியாக இயக்கப்பட்டு வந்த சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது நேற்று திடீரென்று சேலம் செவ்வாய்பேட்டை அருகே நிறுத்தப்பட்டது. காலை 6 மணிக்கு சேலம் டவுன் வந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது செவ்வாய்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில் காயத்தோடு கிடந்துள்ளார்.
உடனே சாதுரியமாக செயல்பட்ட ரயிலின் பைலட் ரயிலை நிறுத்தி உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ஊழியர்கள் சேலம் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் அப்பெண்ணை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிதுள்ளனர்.