
மாலி நாட்டில் உள்ள ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய தங்க சுரங்க திடீரென இடிந்து விபத்துக்குள்ளானது. முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மண்ணில் புதைந்ததாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் நடைபெற்ற வரும் நிலையில் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக முதல் கட்ட அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.