
தமிழக அரசு ஆள் சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வானவர் மற்றும் மாணவிகளுக்கான 17 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தங்குவதற்கான விண்ணப்பங்கள் தமிழக அரசின் சார்பாக வரவேற்கப்பட்டு வரும் நிலையில் வருகின்ற ஜூலை 17ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் படி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விடுதியில் சேர மாணவர்களின் பெற்றோரின் வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தது எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். இது மாணவியருக்கு பொருந்தாது என்ற விதிமுறைகளோடு தமிழக அரசின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.