இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு பவுன் ஆபரண தங்கம் என்பது ரூ.54 ஆயிரத்தை கடந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. மேலும் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்த நிலையில், தங்கம் விலை அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயைக் கூட தொடும் என்று நகை வியாபாரிகள் சங்க தலைவர் கூறியுள்ளார். மேலும் அட்சய திரிதியை நாளில் வழக்கத்தை விட 30 சதவிகிதம், அதாவது 22 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளது என கூறியுள்ளார்.