அக்டோபர் மாத தொடக்க முதலே ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டி வருகிறது. இது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 58,720 ரூபாய்க்கும், ஒரு கிராம் 7330 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட 59 ஆயிரத்தை தங்கம் விலை நெருங்கி வருவது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு புறம் இருக்க தங்கத்துக்கு நிகராக வெள்ளி விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதன்படி ஒரு கிராம் 112 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்த நிலையில் கிலோவுக்கு 2000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட கடந்த 5 நாட்களில் மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு 9000 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளி  தொடர்ந்து இப்படி விலை அதிகரித்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.