இந்தியக் குடிமக்கள் தாங்கள் ஈட்டும் வருமானத்தில் வாங்கும் தங்கத்துக்கு வரி எதுவும் கட்டத் தேவையில்லை. அதுமட்டுமின்றி விவசாயம் மூலம் ஈட்டிய பணம், மரபு வழியாகப் பெற்ற பணம் மற்றும் சேமித்து வைத்த பணம் ஆகியவற்றின் வாயிலாக வாங்கும் தங்கத்திற்கும் வரி கட்ட தேவையில்லை. ஆனால், அவற்றை விற்பனை செய்யும்போது, எவ்வளவு காலம் அவர்கள் வைத்திருந்தனர் என்பதை பொறுத்து தங்கத்துக்கான வரி என்பது விதிக்கப்படும்.

தங்கத்தின் விற்பனை மூலம், குறுகிய காலம் (அ) நீண்ட காலத்துக்கு ஒருவரால் ஈட்டப்படும் ஆதாயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டு, அதற்கேற்ப வரியானது விதிக்கப்படும். தங்கம் வாங்கியதற்கும், விற்பதற்கும் இடையேயான காலம், மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்தால், குறுகிய காலமாகவும் 3 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தால், நீண்ட காலமாகவும் (20% வரி + 4% செஸ் வரி) கருதப்படும்.