தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளி வரத்து குறைந்துள்ள காரணத்தால் தக்காளியின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் மொத்த காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி 500 ரூபாயிலிருந்து 900 ரூபாயாக உயர்ந்துள்ளது.

கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் 125 ரூபாயாகவும், கிலோ 37 ரூபாய்க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் 45 ரூபாயாகவும், 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட அவரைக்காய் 200 ரூபாயாகவும் விற்பனையாகிறது. கோடை மழையின் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ள காரணத்தால் அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளை வருத்தமடைய செய்துள்ளது.