ஜேம்ஸ் கேமரூன் டைரக்டில் அவதார் தி வே ஆப் வாட்டர் திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது. இந்த படம் தொடர்ந்து வசூலை அள்ளி குவித்து வந்தது. 2 மாதங்களாக உலகின் பல பகுதிகளில் இந்த படம் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் டைட்டானிக் படத்தின் வசூலை முறியடித்து புது சாதனை படைத்துள்ளது அவதார்-2. இந்த படம் இப்போது 2.244 யுஎஸ் பில்லியன் டாலரை வசூலித்து டைட்டானிக் திரைப்படத்தின் மொத்த வசூலான 2.242 பில்லியன் யுஎஸ் டாலர் (ரூ.18,530 கோடி) வசூலை கடந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் அவதார்-2 வசூல் 18,546 கோடி ஆகும்.