கோவையை சேர்ந்த பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் வீலிங் செய்து விபத்தை ஏற்படுத்திய புகாரில் சாகசம் செய்யும்போது ஏற்பட்ட விபத்து காரணமாக. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு TTF வாசன் கைது செய்யப்பட்டார். அவரை 15 நாட்கள் சிறையில் வைக்க காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் கட்டுடன் வந்த அவர், மறுநாளே கட்டு இல்லாமல் வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து, எப்படி ஒரே நாளில் சரி ஆகும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.