
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 தொடர்கள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதல் தொடரில் பும்ரா கேப்டனாக செயல்பட்ட நிலையில் அதற்கு அடுத்த தொடரில் ரோஹித் சர்மா இணைந்தார். ஆனால் இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் அவர் சரிவர விளையாடவில்லை. அவர் 5 இன்னிங்ஸில் வெறும் 31 ரன்கள் மட்டும் தான் எடுத்துள்ளார். அதோடு எந்த வீரரை எங்கு நிறுத்த வேண்டும் என்பது கூட அவருக்கு சரிவர தெரியவில்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இப்படி ரோகித் மீது தொடர் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதால் தற்போது அவர் ஐந்தாவது தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுவரை ரோகித் சர்மா விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்த நிலையில் ஒரு போட்டி மட்டும் டிராவில் முடிவடைந்துள்ளது. இதன் காரணமாகத்தான் தற்போது ரோகித் சர்மா ஐந்தாவது டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக பும்ரா ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு ரோகித் சர்மாவுக்கு பதிலாக சுப்மன் கில் அணியில் சேர்க்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் ஏற்கனவே ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக ஒரு தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.