
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். இவர் அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராக திகழ்ந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற ஓ பன்னீர்செல்வம் அதன் பின் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அதிமுக ஆட்சிக்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராக செயல்பட்டார். அதன் பிறகு அதிமுக கட்சியில் உட்பூசல்கள் ஏற்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக பிரிந்தனர். இதைத்தொடர்ந்து அதிமுக மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று ஓபிஎஸ் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியோ அது நடக்க சாத்தியமே இல்லை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது ஓபிஎஸ் திடீரென டெல்லிக்கு சென்றுள்ளார். அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் பாஜகவில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு முன்னதாக ஓபிஎஸ் தான் எக்காரணத்தை கொண்டு பாஜகவில் இணைய மாட்டேன் எனவும் தனியாக கட்சி தொடங்கும் எண்ணமில்லை எனவும் அதிமுக ஒன்றுசேர வேண்டுமென்று விரும்புவதாகவும் கூறினார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஒன்றுசேர வாய்ப்பே இல்லை என்று கூறுவதால் அவர் பாஜகவின் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.