நாம் தமிழர் கட்சியின் சார்பாக  தர்மபுரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பெண் மருத்துவரான அபிநயாவிற்கு, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் சீமான். தர்மபுரியில் 65,381 வாக்குகள் பெற்ற அபிநயா, டெபாசிட்டை இழந்தார்.

இவர் ‘ஹோமியோபதி’ துறையைத் தேர்ந்தெடுத்து, ராசிபுரத்தில் இளங்கலை மருத்துவம் படித்து, மகாராஷ்டிராவில் முதுகலைப் பட்டம்  பெற்றுள்ளார். ‘ 28 வயதாகும் இவருடைய சொந்த ஊர், விழுப்புரம் பக்கத்திலுள்ள பில்லூர் கிராமம். அடிப்படை அமைப்பு, அரசியல் மாற்றம்’ என்ற சீமானின் கொள்கை முழக்கத்தால் ஈர்க்கப்பட்டு, தேர்தல் அரசியலிலுக்குள் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.