
கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று இந்தியாவில் உள்ள 31 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 7 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் என்பது நடைபெற்றது. இங்குள்ள தியோலி-யூனியாரா சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இங்கு சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட தகராறு கட்சியிலிருந்து விலகி பின்னர் சுயேட்சையாக போட்டியிட்டார். இவருடைய பெயர் நரேஷ் மீனா. அங்கு துணை நீதிபதி அமித் சவுத்ரி என்பவர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 3பேர் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம் சாட்டிய மீனா திடீரென தேர்தல் அதிகாரி கன்னத்தில் அறைந்து விட்டார். அந்த இடத்திற்கு உடனடியாக காவல்துறையினர் வந்ததோடு அவர்கள் மீனாவை அங்கிருந்து அகற்றினார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.
बताया जा रहा है Sdm अमित चौधरी वहां पर जबरदस्ती वोट डाल रहा था जिसके चलते हुए नरेश मीणा ने उस पर हाथ उठाया….
भाई नरेश मीणा पर एक तरफा कार्रवाई होगी तो हम चुप बैठने वाले नहीं हम भी सड़कों पर उतरेंगे भाई के लिए@NareshMeena__ pic.twitter.com/h15kzwdkux
— Karni Sena (@RRKarniSena) November 13, 2024