
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக காய்ச்சல், உடல் வலி, சளி இருமல் மற்றும் மூச்சு திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் உடன் சிகிச்சைகளுக்காக பலரும் அனுமதிக்கப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் சிகிச்சை கட்டமைப்புகளை விரிவுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் டெங்கு காய்ச்சலை உறுதி செய்வதற்கான ரத்த பரிசோதனைகளின் முடிவுகளுக்காக நோயாளிகள் நாள்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் இதனை தவிர்ப்பதற்கு ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டதிலிருந்து ஆறு மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவுகளை வழங்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதனால் சிகிச்சை தாமதம் தவிர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.