டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க போவதில்லை என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் சுனில் நரைன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் இவர் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓய்வு முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை. இப்போது அந்த கதவுகள் மூடப்பட்டு விட்டது. வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு ஆதரவளிப்பேன் என தெரிவித்துள்ளார்.