ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியின் 19-வது லீக் ஆட்டத்தில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தொடக்க வீரர்களாக களம் இறங்கிய நிலையில் ரோகித் சர்மா 13 ரன்னில் அவுட் ஆனார். அதன்பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 42 ரன்கள் வரை எடுத்தார்.

இறுதியில் இந்திய அணி  19 ஓவரில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 119 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றி பெற 18 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரை வீசினார். கடைசி ஓவரில் பாகிஸ்தான் பெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. மேலும் இந்திய அணி தரப்பில்   சிறப்பாக பந்து வீசிய பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.