
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் எப்பொழுதுமே பிசிசிஐ, இந்திய அணி, விளையாடும் பிளேயர்கள் என அனைவரையுமே விமர்சனம் செய்து விடுவார். தற்போது இந்திய அணி பயிற்சியாளர் கௌதம் கம்பீர் குறித்து விமர்சனம் செய்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி கோப்பை வென்ற இந்திய அணி பயிற்சியாளரை இப்பொழுது இவர் விமர்சிக்க காரணம் என்ன என்று பார்த்தால் பிசிசி அறிவித்த பரிசு தொகையில் கௌதம் கம்பீர் பெரிய தொகை பெறுவது குறித்து தான் விமர்சனம் வைத்துள்ளார். பிசிசிஐ அளித்த பரிசு தொகையை கேப்டன், பிளேயர் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட குழுவினருக்கும் மொத்தமாக பெரும் தொகையாக அறிவித்திருந்தது.
இதில் பயிற்சியாளருக்கு அதிக தொகை பரிசாக கிடைக்கப்போகிறது இதைத்தான் விமர்சித்துள்ளார் சுனில் கவாஸ்கர். அதாவது டி20 உலக கோப்பை இந்திய அணி வென்ற போது பரிசு தொகையை அறிவித்தது. அப்போது பயிற்சியாளரான டிராவிட்டிற்கு அதிக பரிசு தொகை அறிவிக்கப்பட்டது. ஆனால் டிராவிட் ஒட்டுமொத்த குழுவுக்குமே ஒரே மாதிரியான பரிசு தொகை தான் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் சக பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் பெற்ற தொகை மட்டுமே தான் வாங்கிக் கொண்டார். இதை அனைவருமே பாராட்ட வேண்டும் இது சூப்பரான முன்மாதிரி என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
ஆனால் கௌதம் கம்பீருக்கு பிசிசிஐ அதிகபட்ச தொகை கொடுத்திருக்கும்போது அவர் ஏன் இதுபோன்று அறிவிக்கவில்லை. அவர் மௌனம் காக்கிறார் என்றாலே அவருக்கு அதிக தொகை வருவதை விரும்புகிறார் என்று தான் அர்த்தம். அது அவருடைய விருப்பம் என்றாலும் ராகுல் டிராவிட்டை போல் கௌதம் கம்பீர் செயல்பட்டால் இன்னொரு முன் மாதிரியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.