பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தீபாலி என்பவர் ஆசிரியராக சேர்ந்தார். இவர் இந்தியாவில் இருந்து பீகாரை நீக்கி விட்டால் வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாறிவிடும் என்று கூறிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரை உடனடியாக வேலை இருந்து சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இது பற்றி அவர் வீடியோவில் கூறியதாவது, இந்தியா முழுவதும் பல ஊர்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இருக்கும் நிலையில் ஏதாவது ஒரு ஊரில் என்னை ஆசிரியராக சேர்த்திருக்கலாம். கொல்கத்தாவை பலருக்கும் பிடிக்காது. அங்கு செல்லக்கூட நான் தயாராக தான் இருக்கிறேன். என்னுடைய நண்பர்களில் ஒருவர் டார்ஜிலிங்கிலும், ஒருவர் சில்சாரிலும் மற்றொருவர் பெங்களூருவிலும் பணியாரத்தப்பட்டார். ஆனால் என்னை இந்த மோசமான மாநிலத்தில் பணியமர்த்தி விட்டார்கள் என் மீது அவர்களுக்கு என்ன கோபம்.

என்னுடைய முதல் பணி என்றும் என் நினைவில் இருக்கும் என்பதால் லடாக்கில் கூட என்னை பணியில் சேர்த்திருக்கலாம். ஒடிசா அல்லது தென்னிந்தியாவில் பணி கொடுத்திருக்கலாம். நான் கேலி செய்யவில்லை. பீகாரின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்பதை நான் இங்கு வந்த பிறகு ஒவ்வொரு நாளும் பார்க்கிறேன். இந்த மக்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை. இந்த மாநிலத்தால் தான் இந்தியா இன்னும் வளர்ச்சி அடையவில்லை. ஒருவேளை பீகாரை இந்தியாவில் இருந்து நீக்கிவிட்டால் வளர்ச்சி அடைந்த நாடாக மாறிவிடும் என்று கூறினார். மேலும் இந்த வீடியோ வைரலான நிலையில் அந்த மாநிலத்தின் எம்பி சாம்பவி சவுத்ரி கேந்திரிய வித்யாலயா சங்கத்தின் ஆணியருக்கு கடிதம் எழுத உடனடியாக சம்பந்தப்பட்ட ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.