
அதிக வட்டி முதல் மறைமுக கட்டணங்கள் வரை பல விஷயங்களை டிஜிட்டல் கடன் செயலிகள் பயன்பாட்டில் கவனிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் சேலைகள் மூலம் கடன் பெறுவது என்பதை எளிதாக இருந்தாலும் அதனை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டிஜிட்டல் கடன் செயலிகள் மூலம் கடன் பெறுவதற்கு முன்பு முதலில் அந்த செயலி சட்டபூர்வமான செயலிதானா என்பதை உறுதி செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளின் படி வங்கிகள் மற்றும் டிஜிட்டல் செயல்களுடன் இணைந்து செயல்பட்டால் அது தொடர்பான விவரத்தை தெரிவிக்க வேண்டும். பொதுவாக வங்கி கடன் எளிதாக பெற முடியாதவர்கள் டிஜிட்டல் கடன் பெறுவதற்கு முயற்சி செய்கின்றனர்.
இதனை பயன்படுத்தி மோசடி செயலிகள் அதிவேகமாக கடன் வழங்குவதாக கூறி அதன் பிறகு அதிகமான வட்டி வசூலிக்கின்றனர். மேலும் நீங்கள் மோசடியில் சிக்கி உங்கள் பணத்தை இழக்க நேரிடும். எனவே இந்த செயல்களின் நிபந்தனைகள் மற்றும் விதிகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும் எனவும் கடனை திரும்ப செலுத்தும் காலம் உள்ளிட்ட அம்சங்களை கவனிக்க வேண்டும் எனவும் முடிந்த அளவிற்கு இது போன்ற செயலிகளில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.