
பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் நாடு முழுவதும் காலியாக உள்ள சுமார் 200 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழகத்தில் மட்டும் 10 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.lichousing.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 14 நாளை கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.