தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் ஆகியோர், மதுரை நீதிமன்றத்தில்  தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில்,, 21 வயதுக்கு கீழ் உள்ள இளம் தலைமுறையினர், மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதால் தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என குறைக்க உத்தரவிட வேண்டும் என்றும், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடை செய்யும் வகையில், மது வாங்குவோருக்கு உரிய அடையாள அட்டை வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, மது விற்பனை நேரம் குறைப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை   உத்தரவிட்டுள்ளது. மேலும், மது வாங்குவோருக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும், அரசின் அடையாள அட்டை வைத்துள்ளோருக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது