தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நர்சிங்கி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒருவர் திருட சென்றுள்ளார். அப்போது அவர் மது கடையில் உள்ள மது பாட்டில்களை எடுத்து குடித்துவிட்டு நன்றாக குறட்டை விட்டு படுத்து தூங்கிவிட்டார். முதலில் கடைக்குள் நுழைந்த வாலிபர் கேமராவில் உள்ள ஹார்ட் டிஸ்கை கழற்றி தன்னுடைய பையில் வைத்துள்ளார். பின்னர் அந்த கடையில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டார். இந்நிலையில் அந்தக் கடையில் பல ரகத்தில் மது இருந்ததால் அவருக்கு திடீரென மது குடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.

பின்னர் அவர் மது குடித்துவிட்டு குறட்டை விட்டு தூங்கிய நிலையில் மறுநாள் காலை கடை திறக்கும்போது அவர் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்த கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்துக்கு காவல் கொடுத்துள்ளனர். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த வாலிபரை எழுப்ப முயற்சி செய்த நிலையில் அவர் எழுந்திருக்கவில்லை. இதன் காரணமாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அந்த வாலிபரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும் அவருக்கு போது இறங்காத நிலையில் மதியத்திற்கு பிறகு தான் லேசாக போதை இறங்க ஆரம்பித்தது. மேலும் அவருக்கு போதை முழுமையாக இறங்கிய பிறகு அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.