கள்ளக்குறிச்சியில் விசாராயம் குடித்ததில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பலர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று நேரில் சென்று சந்தித்தார். அதன் பிறகு கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, டாஸ்மாக் கடைகளை உடனே மூடினால் மட்டும் எல்லா பிரச்சினைகளும் முடிந்து விடும் என்பது தவறான கருத்து. சாலை விபத்து நடைபெறுகிறது என்பதற்காக நாம் போக்குவரத்தை நிறுத்தவில்லை. அதுபோன்றுதான் மது கடைகளை மூடினால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுவது தவறான கருத்து. டாஸ்மாக் கடைகளின் அருகாமலேயே மதுவை குறைவாக குடிக்க வேண்டும் என்ற மையங்கள் அமைக்க வேண்டும். மேலும் மருந்து கடைகளை விட மதுபான கடைகள்தான் அதிக அளவில் இருக்கிறது என்று கூறினார்.