தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதாக புகார் எழும் நிலையில் இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கினால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று அரசு எச்சரித்தது. அதன் பிறகு டாஸ்மாக் கடைகளில் பில்லிங் மற்றும் qr கோடு ஸ்கேன் மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் தமிழக முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் டிஜிட்டல் மையம் ஆக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள 220 டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மதுபானங்களை விற்பனை செய்யும் நடைமுறை அமலாகிறது. இதன் மூலம் கூடுதலாக பணம் வாங்கினால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் முதற்கட்டமாக 220 டாஸ்மாக் கடைகளில் மட்டும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் தமிழக முழுவதும் அமலாகும் என்று கூறப்படுகிறது.