
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நல குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இன்று மும்பையில் டாடா குழுமத்தின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது டாடா குழுமத்தின் புதிய தலைவராக ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரரான நோயல் டாடாவை நியமித்தனர். இவர் டாடா அறக்கட்டளை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டாடா ஸ்டில்ஸ் மற்றும் வாட்ச் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். இவர் கடந்த 2000-ம் ஆண்டின் முற்பகுதியில் டாடா குழுமத்தில் இயங்கிய நிலையில் அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்காக இருக்கிறார்.
இவர் தற்போது டாடா அறக்கட்டளை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, 14 டாடா டிரஸ்ட்களையும் நியமிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் எப்போதும் ஊடக வெளிச்சத்திற்கு அப்பாற்பட்டு இருக்க விரும்புவார். இவர் தனது 2010 மற்றும் 2021 ஆகிய காலகட்டங்களுக்கு இடையில் டாடா இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திற்கு தலைமை தாங்கினார். இவர் டாடா குழுமத்தின் பல்வேறு பகுதிகளில் முக்கிய பங்கு வகிக்கிறார். மேலும் டாடா குழுமம் நியமிக்கப்பட்ட பிறகு பல வருடங்கள் கழித்து கடந்த 1892 ஆம் ஆண்டு டாடா டிரஸ்ட் நியமிக்கப்பட்டது. இந்த் டிரஸ்ட் அறக்கட்டளை கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டு வசதி போன்ற பல்வேறு துறைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.