தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்ய பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு வருடமும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் நடப்பு ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை பரிந்துரை செய்யும்படி பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதேசமயம் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய மற்றும் டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களை விருது பரிந்துரை செய்யக்கூடாது என்றும் ஒழுங்கு நடவடிக்கை குற்ற நடவடிக்கைகளுக்கு உள்ளானவர்களையும் பரிந்துரை செய்யக்கூடாது எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.