திருப்பத்தூரில் அரசு மருத்துவரின் அலர்சியத்தால் குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறி பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் கண்களில் கருப்பு துணிகளை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி தனலட்சுமி நிறைமாத கர்ப்பிணையாக கடந்த 17-ஆம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் திடீரென குழந்தையின் உயிருக்கு ஆபத்து என கூறி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு போகும் போது வயிற்றுக்குள்ளேயே குழந்தை உயிரிழந்ததாக கூறியுள்ளனர். அதன் பிறகு தர்மபுரி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் பெண் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது.

குழந்தையின் இறப்புக்கு காரணம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் என குற்றம் சாட்டிய உறவினர்கள் கண்களில் கருப்பு துணிகளை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.