ராஜஸ்தான் மாநிலம் சாஸ்திரி பகுதி உள்ளது. இங்கு இரவு நேரத்தில் பால் வாகனம் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென சில மர்ம நபர்கள் பால் ஏற்றி சென்ற வாகனத்தை மறித்தனர். அதன்பின் ஓட்டுனரை மிரட்டி வாகனத்தை திருடி சென்றனர். இது தொடர்பாக வாகனத்தின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதுடன், அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து வாகனத்தை திருடி சென்றது அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் என தெரியவந்தது. இதுப்பற்றி மாணவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், மாணவர்கள் வாகன ஓட்டுனரிடம் 4 ஆயிரத்து 600 ரூபாயையும் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 3 மாணவர்களை கைது செய்துள்ளனர், மேலும் 2 மாணவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.