
தமிழில் விரட்டு என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர். பிரக்யா ஜெய்ஸ்வால் இவர் தெலுங்கு ஹிந்தி கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். டாகு மகாராஜ் என்ற படத்தில் பிரக்யா பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நடித்திருந்தார்.
இந்தப் படம் கடந்த 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பிரக்யா பேட்டி ஒன்றில் பங்கேற்றிருந்தபோது அவரிடம் டாகு மகாராஜ் படத்தின் ஹிந்தி பதிப்பில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த பிரக்யா, “அதற்கு சல்மான்கான் தான் பொருத்தமாக இருப்பார். அந்த கதாபாத்திரத்திற்கு அவர் தான் உயிர் கொடுக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.