விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ காட்சி வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது இந்த வாரம் கார் மற்றும் பைக்கை நண்பர்கள் போல பாவிக்கும் நண்பர்கள் மற்றும் அதனை விமர்சிக்கும் பொதுமக்கள் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று உள்ளது. இன்றைய இளம் பெண்கள் அதிகமாக கார் மற்றும் பைக்கை விரும்பும் நிலையில் அதில் ஒரு இளம் பெண் தன்னுடைய பைக்கை யாரையும் தொடக்கூட விடாமல் பார்த்துக் கொள்கின்றார். ஆனால் கோபிநாத் அந்த பைக்கை சீண்டிய நிலையில் பெண் தன்னுடைய பாணியில் கோபிநாத்தை எச்சரித்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.