அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றம் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் ஞானசேகரன் செல்போனில் யாரிடமோ பேசியதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த நேரம் அவரது செல்போன் ஏரோப்ளேன் மோடில் தான் இருந்துள்ளது.

இதில் வேறு யாருக்கும் தொடர்பில்லை. தனக்கு பின்னால் பெரிய குழு இருப்பதை காட்ட செல்போனில் பேசுவது போல ஞானசேகரன் நாடகம் செய்யப்பட்டது. குற்றவாளி வேறு ஏதாவது மொபைல் வைத்திருந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என  உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.