நாட்டின் முன்னணி ஐஐடி-களில் சேர்வதற்கான JEE அட்வான்ஸ் தேர்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. தகுதியுள்ள மாணவர்கள் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் பத்தாம் தேதி வரை விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம். JEE மெயின் B.E/B.Tech தாள்களில் முதலிடம் பெற்ற 2,50,000 பேர் இந்தத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர். இதற்கு மாணவர்கள் jeeadv.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.