
ஹரியானா மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த ஒரு விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு SUVகார் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள ஒரு மருந்து கடைக்குள் புகுந்தது. இதில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் மருந்து கடையில் உரிமையாளர் மற்றும் அந்த கடையில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்த நிலையில் இது தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
View this post on Instagram
அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் சடலங்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் உயிரிழந்தவர் 80 வயதான மருந்து கடையின் உரிமையாளர் எனவும் மற்றொருவர் 20 வயது வாலிபர் என்றும் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த அந்த கார் ஓட்டுநரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் மாலை 3 மணி அளவில் அந்த வாகனத்தின் ஓட்டுநர் கழிவறைக்கு செல்வதற்காக காரை ஓரமாக நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
அப்போது அந்த காரில் இருந்த ஒருவர் தற்செயலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால் கார் முன்னோக்கி சென்று மருந்து கடைக்குள் புகுந்து பெரும் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.