
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைக்காக திட்டத்தில் மாதந்தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஏற்கனவே ஒரு கோடி 6 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது புதிதாக 1.48 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்த திட்டத்தில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜூலை 15 ஆம் தேதி முதல் புதிதாக 1.48 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை 1000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த பெண்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் உதயநிதி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். மேலும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என கூறியிருந்தார்.