
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வருகின்ற ஜூன் 24ஆம் தேதி தொடங்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஜூன் 24ஆம் தேதிக்கு முன்பாக சட்டப்பேரவை அலுவல் ஆய்வு குழு கூடி எத்தனை நாட்கள் கூட்டத்தை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யும் எனவும் ஜூன் 24ஆம் தேதி முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கும் என்றும் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் முடிவடைந்த பிறகு நடக்கும் முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால் தமிழக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.