தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்குள் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவு எண்களின் பட்டியல் வருகின்ற ஜூன் 21ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதனை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மறு கூட்டல்/மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேவர்கள் மட்டும் திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.