
பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மூத்த அமைச்சர் துரைமுருகன் திமுக கட்சிக்காக உழைத்த ஜெயிலுக்கு போயிட்டு வந்த நிலையில் அவருக்கு துணை முதல்வர் பதவியை வழங்காதது ஏன் என்றும் அவருக்கு மற்றொரு துணை முதல் பதவியை திமுக வழங்க வேண்டியதானே என்றும் கூறியிருந்தார். இதற்கு தற்போது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறும்போது, பாமகவில் மூத்த தலைவர்களே இல்லையா. பாமக கட்சியில் அன்புமணி அளவுக்கு வேறு யாரும் உழைக்கவில்லையா.? அப்படி இருக்கும்போது அன்புமணி ராமதாஸ் ஏன் தலைவராக மாறினார் என்றார். அதன் பிறகு ஒவ்வொரு முறையும் தேர்தல் நெருங்கும்போது ராமதாஸ் மற்றும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வன்னியர் சமூக மக்களை பகடைக்காயாய் பயன்படுத்துவதாகவும் அடுத்த தேர்தலுக்கு கூட்டணி பேரம் பேச இப்போதே அவர்கள் தயாராகி விட்டதாகவும் கூறினார்.
பாமக கட்சியில் ஜிகே மணி, ஏகே மூர்த்தி போன்ற எத்தனையோ தலைவர்கள் உழைத்த நிலையில் ஜிகே மணியிடம் இருந்த தலைவர் பதவியை பிடுங்கி எதற்காக அன்புமணியிடம் கொடுத்தார்கள்.? பாமக கட்சிக்காக உழைத்து ஓடாய் தேய்ந்த காடுவெட்டி குரு அவர்களை கூட இறுதி காலத்தில் கைவிட்ட உங்களுக்கு வன்னியர் பாசம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. அவருடைய குடும்பத்தின் இன்றைய நிலை என்ன.? என்று கேள்வி எழுப்பினார். மேலும் வன்னியருக்கான 15 சதவீத இட ஒதுக்கீடுக்கான அறிவிப்பை திமுக வெளியிட்டால் அடுத்த தேர்தலில் அவர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவோம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.