இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி ஜியோ நிறுவனம் 329 ரூபாய், 949 ரூபாய், 1049 ரூபாய் என மூன்று புதிய பிரிபெய்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

இதில் 329 ரூபாய் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 1.5 ஜிபி டேட்டா , வரம் பெற்ற குரல் அழைப்பு ஆகியவை வழங்கப்படுகிறது. அடுத்து 949 ரூபாய் திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் இரண்டு ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு, 90 நாட்களுக்கான ஹாட் ஸ்டார் சப்ஸ்கிரிப்சன் கிடைக்கும். அடுத்ததாக 1049 ரூபாய் திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2ஜிபி டேட்டா, சோனி லைவ் மற்றும் 5g சப்ஸ்கிரிப்ஸன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.