
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்தும் வருகிறது.
இந்த நிலையில் ஜியோ பாரத் புதிய மாடல் போனை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் 123 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் வரம்பற்ற அழைப்புகள், 14 ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி ஆகியவற்றை வழங்குகின்றது. இந்த புதிய ஜியோ பாரத் மாடலில் யுபிஐ வசதி, ஜியோ பே, லைவ் ஜியோ டிவி, ஜியோ சினிமா, புதிய ஜியோ சாட் உள்ளிட்ட அம்சங்களுடன் வருகின்றது. இதன் விலை 139 ரூபாய் மட்டுமே. ஒரு வருட ரீசார்ஜ் திட்டம் 1234 ரூபாய்க்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 168 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.